மலைக்க வைக்கும் காமி ரீட்டா 32வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறிய நேபாள வீரர்

 

காத்மண்டு: நேபாளத்தின் சாகர்மாதா என அழைக்கப்படும் எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 8,848 மீட்டர் உயரத்தில் உள்ளது. இது பூமியின் மிக உயரமான மலை சிகரமாகும். இந்நிலையில், நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் உள்ள சோலுகும்பு மாவட்டத்தின் தேம் கிராமத்தில் 1970ம் ஆண்டு பிறந்தவர் காமி ரீட்டா. ஷெர்பா சமூகத்தை சேர்ந்த காமி ரீட்டா, 1992ம் ஆண்டு தொழில்முறை மலையேற்ற வழிகாட்டியாக வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் 1994ம் ஆண்டு தனது 24ம் வயதில் முதன்முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்.

கின்னஸ் உலக சாதனை பத்தகத்தின்படி, எவரெஸ்ட் மேன் என்றழைக்கப்படும் காமி ரீட்டா, ஒவ்வொரு ஆண்டும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து வருகிறார். கடந்த 2025ம் ஆண்டு மே 27ம் தேதி 31வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதைத்தொடர்ந்து நேற்று காலை 10:12 மணிக்கு 32வது முறையாக 29,032 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். இதன் மூலம் அவர் தனது சொந்த சாதனையை முறியடித்துள்ளார்.

Related Stories: