டெல்லி: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 62வது லீக் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்தது. 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியுள்ளது.
