சில்லிபாயிண்ட்…

* எம்பிஎல் ஆடவர் பிரிவில் மேலும் மூன்று அணிகள்
போபால்: மத்தியபிரதேஷ் பிரீமியர் லீக் ஆடவர் போட்டிகளில் (எம்பிஎல்) புதிதாக மேலும் 3 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நடப்பாண்டில் நடைபெறும் எம்பிஎல் போட்டிகளில், மால்வா ஸ்டாலியன்ஸ், உஜ்ஜெயின் ஃபால்கன்ஸ், ராயல் நிமார் ஈகிள்ஸ் ஆகிய அணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எம்பிஎல் மகளிர் பிரிவிலும், இரு அணிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. அதையடுத்து, நடப்பாண்டில் நடைபெறும் மகளிர் பிரிவு போட்டிகளில் 5 அணிகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட்டுக்கு சிறந்த வரவேற்பு இருப்பதால், கூடுதல் அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

* சிண்டாரோவை வீழ்த்தி பிரக்ஞானந்தா அசத்தல்
புகாரெஸ்ட்: ரொமேனியாவின் புகாரெஸ்ட் நகரில் சூப்பர் செஸ் கிளாசிக்ஸ் போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், தமிழகத்தை சேர்ந்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்டர் ஜவோகிர் சிண்டாரோ உடன் மோதினார். துவக்கம் முதல் சிறப்பாக காய்களை நகர்த்திய பிரக்ஞானந்தா, எளிதில் சிண்டாரோவை வீழ்த்தி அசத்தினார். சமீபத்தில் முடிந்த கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சிண்டாரோ வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்றிருந்தார். உலக செஸ் சாம்பியன் போட்டியில் நடப்பு சாம்பியன் குகேஷ் உடன் சிண்டாரோ மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: