குஜராத்துக்கு எதிரான போட்டி கொல்கத்தா அணி வெற்றி

கொல்கத்தா: குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 29 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஐபிஎல் தொடரின் 60வது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற குஜராத் பந்து வீசியது. அதையடுத்து, கொல்கத்தா அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் அஜிங்கிய ரஹானே, ஃபின் ஆலன் களமிறங்கினர். முகம்மது சிராஜ் வீசிய 5வது ஓவரில் ரஹானே (14 ரன்) கிளீன் போல்டானார்.

அதன் பின், ஆலன், அங்கிரீஷ் ரகுவன்ஷி இணை சேர்ந்து, குஜராத் பந்து வீச்சை துவம்சம் செய்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். தடாலடி ஆட்டத்தை அரங்கேற்றிய ஆலன், 35 பந்துகளில் 10 சிக்சர், 4 பவுண்டரிகளுடன் 93 ரன்கள் குவித்திருந்த நிலையில் சாய் கிஷோர் பந்தில் ஆட்டமிழந்தார். பின் வந்த கேமரூன் கிரீனும், ரகுவன்ஷியும் சேர்ந்து ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். அதனால், 17 ஓவரில் கொல்கத்தா 200 ரன்களை எட்டியது.

இவர்களின் அதிரடி தொடர்ந்ததால் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி, 2 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் விளாசியது. ரகுவன்ஷி 82 ரன், கிரீன் 52 ரன்னுடன் களத்தில் இருந்தனர். குஜராத் தரப்பில் முகம்மது சிராஜ், சாய் கிஷோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 2வது இன்னிங்சை துவங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன் மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. அதிகபட்சமாக கில் 85 ரன், பட்லர் 57 ரன், சாய் சுதர்சன் 53 ரன் எடுத்தனர்.

Related Stories: