திமுக கூட்டணியில் தொடர்கிறோம்: காதர் மொகிதீன் அறிவிப்பு

சென்னை: மு.க.ஸ்டாலினுடன் நேற்றும் இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; நாளையும் இருப்போம் எனவும் திமுக கூட்டணியில் தொடர்கிறோம் எனவும் ஐயூஎம்எல் தலைவர் காதர் மொகிதீன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக 108 தொகுதிகளில் வென்றது. ஆட்சிய அமைக்க பெரும்பான்மை 118 தேவைப்படும் நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆதரவு கோரி, விஜய் தரப்பில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி பாபநாசம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும் தங்களின் ஆதரவு திமுக கூட்டணிக்கு மட்டுமே எனவும், தற்போது வரை மதச்சார்பற்ற கூட்டணியில் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொகிதீன் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
திமுக – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறவு என்பது தேர்தல் காலத்து உறவு அல்ல, இது கொள்கை ரீதியான கூட்டணி. ஸ்டாலின் உடன் நேற்றும் இருந்தோம்; இன்றும் இருக்கிறோம்; நாளையும் இருப்போம். மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ அதற்கு முஸ்லிம் லீக் கட்டுப்படும்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: