சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் பாஜ வெற்றி பெற்றதையடுத்து அங்கு அக்கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். உழைக்கும் மக்களின் விடுதலைக்கான வழிகாட்டியான, லெனின் சிலை உடைக்கப்பட்டது தொழிலாளி வர்க்கத்திற்கு எதிரான மாபெரும் தாக்குதலாகும். இதை முறியடிக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம்:
மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி வன்முறை சம்பவங்களில் பாஜ குண்டர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் லெனின் சிலையை உடைத்துள்ளனர். இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. பாசிச சக்திகள் லெனின் சிலையை சேதப்படுத்தினாலும் அவரது சித்தாந்ததை ஒருபோதும் அழிக்க முடியாது. இதுபோன்ற செயல்களை போலீசார் தடுக்க வேண்டும்.
