திம்பம் வனப்பகுதியில் கனமழை மலைப்பாதையில் அருவியாக கொட்டிய நீர்

சத்தியமங்கலம், மே 6: சத்தியமங்கலம் அடுத்துள்ள திம்பம் மற்றும் ஆசனூர் மலைப்பகுதியில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்த நிலையில், மாலை நேரத்தில் திம்பம் மலை உச்சியில் உள்ள வனப்பகுதியில் பரவலாக கனமழை பெய்தது.

இதன் காரணமாக, மலைப்பாதையில் மழைநீர் பெருக்கெடுத்து அருவியாக கொட்டியது. இதனை அவ்வழியாக சென்ற பயணிகள் கண்டு ரசித்தனர். திம்பம் மற்றும் ஆசனூர் பகுதியில் பரவலாக மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. மேலும் வனப்பகுதியில் பெய்த மழையால் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது.

 

 

Related Stories: