வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது

 

ஈரோடு, ஏப்.22: வெளி மாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளச்சந்தை வெறிச்சோடிது காணப்பட்டது. ஈரோடு ஜவுளி சந்தை ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமை மாலை தொடங்கி செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறும் தென்னிந்திய அளவில் ஈரோடு ஜவுளி சந்தைக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் இருந்து நூற்றுக்கணக்கான வியாபாரிகள் அதிக அளவில் வந்து துணிகளை கொள்முதல் செய்வார்கள் கோடிக்கணக்கில் வர்த்தகம் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதனால், ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படும் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இதன் காரணமாக, வெளி மாநில வியாபாரிகள் வருகை குறைந்து வியாபாரமும் மந்தமாக நடந்து வருகிறது.

Related Stories: