கொடுமுடி,ஏப்.22: கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று முன்தினம் வேளாண் விளை பொருட்கள் ஏலம் நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 23,495 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதில் குறைந்தபட்சமாக கிலோ ரூ.37.39க்கும், அதிகபட்சமாக ரூ.48.89க்கும். சராசரியாக ரூ.47.10க்கு ஏலம் போனது. மொத்தம் 6,690 கிலோ எடையுள்ள தேங்காய்கள் 2 லட்சத்து 90 ஆயிரத்து 563 ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் 1045 மூட்டை கொப்பரை வரத்தானது. இதில் முதல் தரம் சராசரியாக ரூ.171.60க்கும், 2ம் தரம் சராசரியாக ரூ.150.52க்கு ஏலம் போனது. மொத்தமாக 50,013 கிலோ எடை கொப்பரை 77 லட்சத்து 6 ஆயிரத்து 526 ரூபாய்க்கு விற்பனை நடந்தது. இதேபோல 382 மூட்டை எள் வரத்தானது. இதில் கருப்பு மற்றும் சிவப்பு ரகம் என மொத்தம் 24,760 கிலோ எள் 34 லட்சத்து 42 ஆயிரத்து 14 ரூபாய்க்கு விற்பனையானது.
மொத்தமாக தேங்காய், கொப்பரை மற்றும் எள் சேர்த்து 1 கோடியே 14 லட்சத்து 39 ஆயிரத்து 103 ரூபாய்க்கு விற்பனை நடந்தது.
