கடம்பூர் மலைப்பகுதியில் பரவலாக மழை விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

சத்தியமங்கலம், மே 6: ஈரோடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது. அதன்படி, நேற்று மதியம் சத்தியமங்கலம் அடுத்துள்ள கடம்பூர் மலைப்பகுதியில் பரவலாக மழை பெய்தது. கடம்பூர் கல்கடம்பூர், அத்தியூர், இருட்டிபாளையம், பவளக்குட்டை, பசுவனாபுரம், கரளியம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் சுமார் 45 நிமிடம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது.

விவசாய நிலங்களில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நின்றது. கோடை வெயில் காரணமாக கடுமையான வறட்சி ஏற்பட்ட நிலையில் திடீரென பெய்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தற்போது பெய்த மழை விவசாயத்திற்கு பேருதவியாக அமைந்துள்ளதாகவும், வனப்பகுதியில் மரம், செடி கொடிகள் துளிர்த்து வனவிலங்குகளுக்கு தீவனம் மற்றும் குடிநீர் பற்றாக்குறை நீங்க வாய்ப்புள்ளதாகவும் கடம்பூர் மலைப்பகுதி மக்கள் கூறினர்.

 

Related Stories: