அவல்பூந்துறையில் ரூ.9.4 லட்சத்துக்கு எள் ஏலம்

மொடக்குறிச்சி,மே.6: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று எள் ஏலம் நடந்தது. ஏலத்தில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 91 மூட்டைகள் எள்ளினை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.  இதில் கருப்பு எள் குறைந்த பட்சமாக கிலோ ரூ.136.72க்கும், அதிகபட்சமாக ரூ.145.72க்கும், சராசரியாக ரூ.142.72க்கும், இதேபோல் சிவப்பு எள் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.121க்கும்,அதிகபட்சமாக ரூ.139.72க்கும், சராசரியாக ரூ.136.72க்கு ஏலம் போனது. மொத்தம் 6,778 கிலோ எடையுள்ள எள் ரூ.9 லட்சத்து 4 ஆயிரத்து 962 ரூபாய்க்கு விற்பனையானது.

 

Related Stories: