ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சியினர் ‘தனி டிரஸ் கோடு’

ஈரோடு, மே 5: ஈரோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் அரசியல் கட்சியினர் ‘தனித்தனி டிரஸ் கோடு’ அணிந்து வருகை தந்தனர். ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. முன்னதாக வேட்பாளர்கள், முகவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் அனுமதித்தனர்.

இதில், ஒவ்வொரு கட்சியினரும் தங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ‘‘தனித்தனி டிரஸ் கோடு’ அணிந்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தனர். அதன்படி, திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் மஞ்சள் துண்டு அணிந்தும், அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பச்சை துண்டு அணிந்தும், தவெக.வினர் வெள்ளை சட்டை, காக்கி பேண்ட் அணிந்தும், நாம் தமிழர் கட்சியினர் பச்சை நிற டி-சர்ட் அணிந்து வருகை தந்தனர்.

 

Related Stories: