சேலம்: தமிழகத்தில் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் வரத்து அதிகரித்துள்ளதால் மாம்பழம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. மேட்டூர் சுற்றுவட்டாரத்தில் ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, வீரக்கல் உள்ளிட்ட இடங்களில் மா சாகுபடி செய்யப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ மாம்பழம் ரூ.28க்கு மட்டுமே விற்பனையாவதாக விவசாயிகள் கவலை அடைந்தனர்.
