சத்தியபாமா நிகர்நிலை பல்கலையில் 91.88% மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை:எஸ்ஆர்எச் அணியின் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மா வழங்கினார்

சென்னை: சத்தியபாமா சாதனையாளர்கள் தினத்தை கொண்டாடும் வகையில், 2026ம் ஆண்டு சிறந்த வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக இந்திய அணியின் கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் டி20 சன்ரைசர்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரருமான அபிஷேக் ஷர்மாவிற்கு நிறுவன வேந்தர் மரியஜீனா ஜான்சன், பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கி கௌரவித்தனர்.

இதைத்தொடர்ந்து நிறுவன வேந்தர் மரியஜீனா ஜான்சன், அபிஷேக் சர்மா, இந்தியன் கிரிக்கெட் வீரர் மற்றும் தலைவர் மரிய ஜான்சன் ஆகியோர் விழாவிற்கு தலைமையேற்று வேலை வாய்ப்பு முகாமில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி கவுரவித்தனர். கல்லூரி வேந்தர், தலைவர் இருவரும் இந்திய கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மாவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். வேலைவாய்ப்புக்கு பதிவு செய்த மாண வர்களில் 91.88% விழுக்காடு மாணவர்கள், பல்வேறு துறைகளில் உயர்ந்த ஊதியத்துடன் பணி அமர்த்தப்பட உள்ளனர். 40 மாணவர்களுக்கு ஆண்டுக்கு 41.20 லட்சம் ஊதியத்தில் பணி ஆணை வழங்கப்பட்டது.

2026ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பம், மென்பொருள் உருவாக்கம், ஆலோசனை வழங்கல், நிதி மேலாண்மை, செயலாக்கம், விற்பனை மற்றும் விளம்பரப்படுத்துதல் போன்ற பல்வேறு பிரிவுகளில் இருந்து 380க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் வருகைபுரிந்து இந்தாண்டு மொத்தமாக 3633 பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. சத்தியபாமா நிகர்நிலை பல்கலைகழகத்தின் உயர்கல்விக்கான ஆலோசனை குழு மூலம் படித்த 235 மாணவர்கள் மேற்படிப்புக்காக அமெரிக்கா, லண்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஐயர்லாந்து, கன்னடா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம் உள்ளிட்ட வெளிநாடுகளில் படிக்க உள்ளனர். வெளிநாடுகளில் உள்ள கல்லூரியில் மேற்படிப்பு படிக்க தேர்வாகியவர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்கப்படுத்தினர்.

Related Stories: