மக்களின் நலனை எண்ணாமல், LPG விலையை ஏற்றுவது சரியல்ல: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் கேஸ் விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வரின் சமூக வலைதள பதிவில்:
மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காணுங்கள். தேர்தலுக்கு முன்பே கணித்ததுபோல், தேர்தல் முடிந்தவுடன் LPG கேஸ் விலையை உயர்த்தியிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, அதன் பலனை மக்களுக்கு அளிக்கவில்லை. இப்போது மேற்காசிய போரை என்ற நெருக்கடியை வைத்து, மக்களின் நலனை எண்ணாமல், விலையை ஏற்றுவது சரியல்ல. இந்த LPG கேஸ் விலை உயர்வு ஏற்படுத்தும் தாக்கங்களை உணர்ந்து, இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: