கொடைக்கானல்: கொடைக்கானலில் அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வாகனங்களுக்கு மே 3ம் தேதி வரை இலவச அனுமதி என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. ஆன்லைன் கட்டண முறையை திரும்பப் பெற வலியுறுத்தி வாடகை வாகன ஓட்டுநர்கள் காலை முதல் போராடி வந்தனர். 4ம் தேதி முதல், கொடைக்கானலில் 5 இடங்களில் வரிசையில் நிற்காமல் உடனடியாக QR CODE மூலம் டிக்கெட் பெறும் நடைமுறை செயல்படுத்தப்படும் எனவும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.
