பிரமோற்சவ தேர் திருவிழா கோலாகலம் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் ஆரணி அருகே சிறுமூர் கிராமத்தில்

ஆரணி, ஏப். 22: ஆரணி அடுத்த சிறுமூர் கிராமத்தில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலில் பிரமோற்சவ திருவிழா கடந்த 4ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் அங்கூரார்பணம், துவஜாரோகணம், அம்சவாகனம், சிம்ம வாகனம், சூரியசந்திர வாகனம், சேஷ வாகனம், கருடவாகனம், யானை வாகனம், இரவு உற்சவம் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான நேற்று பிரமோற்சவ தேர் திருவிழா நடந்தது. அப்போது, கோயில் மூலவர் வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு அருள்பாலித்தார். இதைதொடர்ந்து, அலங்கரிக் கப்பட்ட வீர ஆஞ்சநேயசுவாமியை தேரில் அமர வைத்து, சிறுமூர் ஊராட்சியில் உள்ள முக்கிய விதிகள் வழியாக தேரோட்டம் நடந்தது.

அப்போது, காப்பு கட்டிய பக்தர்கள் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைதொடர்ந்து இன்று கோயில் சீதா கல்யாணம் குதிரை உற்சவம் நடைபெறவுள்ளது. திருவிழாவின்போது அக்ராப்பாளையம் மருத்துவ குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர், ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்விநாயகம் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: