மகளிர் இடஒதுக்கீடு உபி முதல்வர் யோகி நடைபயணம்

லக்னோ: மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுடன் இணைத்து கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்தது. இதற்கு எதிராக உபி பாஜவால் ஏற்பாடு செய்யப்பட்ட மகளிர் நடைபயணம் நிகழ்வில், முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜ மாநிலத் தலைவர் பங்கஜ் சவுத்ரி மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டனர். முதல்வரின் இல்லத்திலிருந்து சட்டப்பேரவை வரை நடைபெற்ற இந்த நடைபயணத்தில், பெண் அமைச்சர்கள் உட்பட ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், முதல்வர் யோகி ஆதித்யநாத் எதிர்க்கட்சிகளை நோக்கிப் பல கேள்விகளை எழுப்பினார். இந்த நடைபயணத்திற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

சட்டப்பேரவைக்கு வெளியே கூடியிருந்த மக்கள் மத்தியில் யோகி பேசுகையில்,’ காங்கிரசாக இருந்தாலும் சரி அல்லது சமாஜ்வாடி கட்சியாக இருந்தாலும் சரி, இவர்களின் செயல்கள் பெண்களுக்கு எதிரானவை. பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றால் 2027ல் வரும் உபி சட்டப்பேரவை ேதர்தலில் சமாஜ்வாடி கட்சிக்கோ அல்லது காங்கிரஸ் கட்சிக்கோ வாக்களிக்காதீர்கள். பிரதமர் மோடி அவர்களுக்கு, தங்கள் ‘பெண் விரோத’ பிம்பத்தைக் களைவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கினார். ஆனால் எதிர்க்கட்சிகளின் செயல்பாடு பெண்களின் கண்ணியத்திற்கு எதிரானதாகவே அமைந்துள்ளது’ என்றார்.

Related Stories: