ஹிந்தியில் வெளியான படத்தின் மோசடி கதையால் ஈர்க்கப்பட்ட காதல் ஜோடி : சிபிஐ அதிகாரி போல நடித்து மோசடி

புதுடெல்லி: 2005ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான கிரைம் அடிப்படை திரைப்படம் பண்டி அவுர் பப்லி இந்த படத்தின் மோசடி கதைக்களத்தில் ஈர்க்கப்பட்ட காதல் ஜோடி, டெல்லியில் உள்ள பலரையும் ஏமாற்றி பணம் பறித்து வந்தசம்பவம் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த காதல் ஜோடி சிபிஐ அதிகாரிகள் போல நடித்து வசதியானவர்களிடம் கை வரிசை காட்டியுள்ளது.

டெல்லியை சேர்த்த இகார என்ற பெண் ஷாப்பூர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகாரளித்தார். சமூக வலைத்தளத்தில் மன்சூர் என்பவரிடம் பேசி நெருங்கியதாகவும் அதன் மூலம் தனது குடும்பம் மற்றும் பிசினஸ் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் சேகரித்த அந்த நபர் ஒரு நாள் தன்னை சிபிஐ அதிகாரி என்று கூறி மெகா மோசடியில் ஈடுபட்டதாக அந்த பெண் புகார் அளித்திருந்தார்.

தன்னுடைய காதலி ரோஸியுடன் சேர்த்து போலியாக அடையாள அட்டைகளை காண்பித்து பிசினஸ் லாபத்தில் பங்கு வேண்டும் என்றும் இல்லையென்றால் சுங்கதுறையினரிடம் மாட்டி விட்டுவிடுவோம் என கூறியும் மிரட்டியதாக தெரிகிறது.

ஆரம்பத்தில் 5 லட்சம் ரூபாயை மிரட்டி பறித்த ஜோடி கூடுதலாக பணம் கேட்டு இகாரவிற்கு அழுத்தம் கொடுத்திருக்கின்றன. இதனால் அவர் வேறு வழியின்றி வீட்டில் தெரியப்படுத்தி இருக்கிறார். உடனே இகாராவின் கும்பத்தினர் அந்த ஜோடியை அழைத்து பேச அவர்கள் செல்போன் எண்ணை ப்ளாக்கில் போட்டுவிட்டு தலைமறைவு ஆகிவிட்டனர். அப்போது தான் இவர்கள் மோசடி நபர்கள் என தெரிய வந்திருக்கிறது.

இதனையடுத்து பாதிக்கபட்டோர் காவல் நிலையம் சென்று இருக்கின்றனர்.இந்த விவகாரத்தில் தனி படை அமைத்த டெல்லி குற்ற பிரிவு போலீசார் மோசடியில் ஈடுபட்ட ஜோடியை பிடிப்பதற்கு களம் இறங்கினர். பணம் அனுப்பிய வங்கி கணக்கு விபரங்களை ட்ராக் செய்து இறுதியாக மன்சூர் அஹமத்தை தூக்கினர்.

டெல்லியில் உள்ள பிரபல சலூன் கடையில் பணியாற்றி வந்துள்ளார், காதலியான ரோஸி தையல் கடையில் வேலை பார்த்தவர். பட்டதாரிகளான இருவரும் சில ஆண்டுகளாக காதலித்து வருவதுடன் ஆடம்பர செலவிற்கு பணம் தேவை என்பதால் வசதிப்படைத்தவர்களை குறி வைத்து சிபிஐ அதிகாரி என கூறி ஏமாற்றி பணம் பறித்து வந்துள்ளனர்.

இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து செல்போன்கள், பல்வேறு வங்கி கணக்குகளின் டெபிட் கார்டுகள், போலி அடையாள அட்டை உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்திருக்கின்றனர். இதுவரை 20க்கு மேற்பட்டோரிடம் மோசடி செய்து பல லட்சம் ரூபாய் பணத்தை இப்படி வசூல் செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நடத்தப்பட்டு வரும் தொடர் விசாரணையில் மோசடி ஜோடி குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம். சமூக வலைத்தளங்களில் அறிமுகம் இல்லாத நபர்களை நம்பி தனிபட்ட விவரங்களை பகிர வேண்டம் என சைபர் கிரிம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: