தேவையான பொருட்கள்
டிராகன் பழம் 1 (நன்றாக பழுத்தது)
பால் 1 கப் (பாலுக்கு பதில் தேங்காய் பால் பயன்படுத்தலாம்)
தேன் அல்லது சர்க்கரை 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு 1 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)
முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா – தலா ஒரு டீஸ்பூன் (துருவியது).
செய்முறை
டிராகன் பழத்தை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கவும். அதை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதில் பால், தேன்/சர்க்கரை சேர்த்து மீண்டும் ஒரு முறை அரைக்கவும். இந்த கலவையில் துருவிய முந்திரி, பாதாம் மற்றும் பிஸ்தா சேர்த்து கலந்து குச்சி ஐஸ் மோல்ட்களில் ஊற்றவும். 68 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும். முழுவதும் உறைந்த பிறகு எடுக்கவும். சுவையான டிராகன் பழ குச்சி ஐஸ் தயார்.
டிராகன் பழம் மருத்துவ பயன்கள்
உடல் சூட்டை குறைக்கும்.
வெயில்காலத்தில் குளிர்ச்சி தரும்.
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் ஜீரணத்திற்கு உதவும்.
வைட்டமின் சி நிறைந்ததால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
குறைந்த கலோரி இருப்பதால் உடல் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு நல்லது.
தோல் அழகுக்கு உதவும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது.
குறிப்பு
குழந்தைகளுக்காக செய்யும்போது சர்க்கரை அளவை குறைத்து தேன் பயன்படுத்தலாம்.
நிறம் அழகாக இருக்க வெள்ளை டிராகன் பழத்துடன் சிவப்பு டிராகன் பழம் கலந்து செய்யலாம்.
மேலே சிறிய பழ துண்டுகள் சேர்த்தால் இன்னும் அழகாக இருக்கும்.
– ஹேமலதா வாசுதேவன்
