வெஜிடபிள் பணியாரம்

தேவையானவை:

பச்சரிசி – கால் கிலோ
புழுங்கலரிசி – கால் கிலோ
உளுத்தம் பருப்பு – 50 கிராம்
கேரட் – 100 கிராம்
பீன்ஸ் – 50 கிராம்
கடலைப் பருப்பு – 25 கிராம்
பச்சை மிள காய் – 5
எண்ணெய் – 200 கிராம்
உப்பு – தேவைக் கேற்ப.

செய்முறை:

பச்சரிசி, புழுங்கலரிசி, உளுத்தம் பருப்பு மூன்றையும் ஊறவைத்து, தண்ணீரை வடிகட்டி அரைத்து, உப்பு போட்டு கரைத்து மூன்று மணி நேரம் புளிக்க விடவும். பீன்ஸ், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கேரட்டை தோல் நீக்கி துருவிக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பை சற்று சிவக்க வறுத்து, அத்துடன் பீன்ஸ், கேரட்டை சேர்த்து சற்று வதக்கி மாவில் ெகாட்டி கிளறவும். அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து, மாவை கரண்டியால் எடுத்து ஊற்றவும். ஒரு புறம் வெந்ததும், மறு புறம் திருப்பி போட்டு வேகவைத்து எடுக்கவும். தேங்காய் சட்னியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

– ஆஷா தேவி, சென்னை.