தேவையான பொருட்கள்:
*சுண்டைக்காய் 1 கப்
*கடலைமாவு 1/2 கப்
*அரிசி மாவு 2 டேபிள்ஸ்பூன்
*மிளகாய் தூள் 1/2 டீஸ்பூன்
*மஞ்சள் தூள் சிறிதளவு
*உப்பு தேவைக்கு
*எண்ணெய் பொரிக்க
*புளிப்பு மோர் 2 கப்
*தேங்காய் 1/2 கப்
*சீரகம் 1/2 டீஸ்பூன்
*பச்சை மிளகாய் 2
*இஞ்சி சிறிதளவு
*மஞ்சள் தூள் சிறிதளவு
*உப்பு தேவைக்கு
*கடுகு 1/2 டீஸ்பூன்
*உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
*வெந்தயம் சிறிதளவு
*கருவேப்பிலை சிறிதளவு
*எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன்.
செய்முறை:
*சுண்டைக்காயை லேசாக நசுக்கி விதையை சிறிது எடுத்துவிடலாம்.
*கடலைமாவு, அரிசி மாவு, மசாலா, உப்பு சேர்த்து கெட்டியான மாவாக கலக்கவும். சுண்டைக்காயை அதில் முக்கி எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். தேங்காய், சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்றாக அரைக்கவும். மோரில் அரைத்த கலவை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து கலக்கவும். இதை அடுப்பில் வைத்து கொதிக்காமல் வெதுவெதுப்பாக சூடாக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு, வெந்தயம், கருவேப்பிலை
தாளிக்கவும்
*இதை மோர்க்குழம்பில் சேர்க்கவும். பொரித்த சுண்டைக்காய் போண்டாவை குழம்பில் சேர்த்து 5 நிமிடம் ஊற விடவும். சுவையான சுண்டைக்காய் போண்டா மோர் குழம்பு தயார்.
*சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம். இதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவும். வயிற்றுப்போக்கு, வயிற்று வலி போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த உதவும்.
*சுண்டைக்காய் இயற்கையாக குடல் புழுக்களை குறைக்க உதவுகிறது. இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைத்திருக்க உதவலாம்.இதில் உள்ள சத்துகள் உடல் எதிர்ப்பு சக்தியை உயர்த்தும். கல்லீரலை சுத்தப்படுத்தி நன்றாக செயல்பட உதவும்.
*சுண்டைக்காய் சாப்பிட்டால் உடல் உறுதி, சக்தி அதிகரிக்கும். பசியைத் தூண்டும்
– ஹேமலதா வாசுதேவன்
