மக்ரோனி மசாலா தோசை

தேவையானவை:

தோசை மாவு – 1 கப், வேகவைத்த மக்ரோனி – ½ கப், பொடியாக நறுக்கிய வெங்காயம், துருவிய கேரட் – தலா ½ கப், கடுகு, மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, சென்னா மசாலா, மிளகாய் தூள் – தலா ½ டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 100 கிராம்.

செய்முறை:

அடுப்பில் வாணலியை வைத்து நான்கு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்து வெங்காயம், கேரட் சேர்த்து வதக்கவும். மஞ்சள் தூள், பாவ் பாஜி மசாலா, சென்னா மசாலா, மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும். பின்பு மக்ரோனியை போட்டு கிளறி, ஒரு மேஜைக்கரண்டி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும். அடுப்பில் தோசைக் கல்லை போட்டு சூடானதும், தோசை மாவை எடுத்து மெல்லிய தோசைகளாக வார்த்து, நடுவில் மக்ரோனி மசாலாக் கலவையை வைத்து மடித்து மூடவும். சாம்பார், சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை மேலும் கூடுதலாக இருக்கும்.