மக்ரோனி பாதாம் பாயசம்

தேவையானவை:

வேகவைத்த மக்ரோனி – ½ கப்
பால் – ½ லிட்டர்
பாதாம் மிக்ஸ் – 1 டேபிள் ஸ்பூன்
முந்திரிப் பருப்பு – பத்து
உலர்ந்த திராட்சை – 10
ஏலக்காய் தூள் – ½ தேக்கரண்டி
சர்க்கரை – 150 கிராம்
நெய் – 25 கிராம்.

செய்முறை:

முந்திரிப் பருப்பு, திராட்சையை நெய் விட்டு பொன்னிறமாக வறுத்து வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி கொதிக்க விடவும். கொதித்ததும் அடுப்பின் தணலை குறைத்துவிட்டு மக்ரோனியை சேர்க்கவும். அவ்வப்போது கிளறி விடவும். பால் சுண்டத் தொடங்கும் போது பாதாம் மிக்ஸ் பவுடர், முந்திரிப் பருப்பு, திராட்சை, ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி, ஐந்து நிமிடங்கள் வைத்து, பின்பு அடுப்பை அணைத்து விடவும். இதை சூடாகவோ அல்லது குளிர வைத்தோ பரிமாறவும்.