ஆப்பிள் மோர்க் குழம்பு

தேவையானவை:

ஆப்பிள் – 1
தயிர் – 1 கப்
தேங்காய் – அரை மூடி
பச்சைமிளகாய் – மூன்று
சீரகம் – ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
கடுகு – அரை தேக்கரண்டி
சீரகம், வெந்தயம் – கால் தேக்கரண்டி
மிளகாய் வற்றல் – 1
கறிவேப்பிலை – சிறிதளவு
தேங்காய் எண்ணெய் – 3 தேக்கரண்டி.

செய்முறை:

ஆப்பிளை தோல் நீக்கி, மஞ்சள் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். தேங்காய் துருவல், பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து அரைக்கவும். வெந்த ஆப்பிளை கூழாக்கி, அத்துடன் அரைத்த தேங்காய் கலவை, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். பிறகு கடைந்த தயிரை சேர்த்து, நுரைத்து வரும்போது அடுப்பிலிருந்து இறக்கவும். கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை, மிளகாய் வற்றல் இவைகளை தேங்காய் எண்ணெயில் போட்டு தாளிக்கவும்.