கொள்ளிடம் ஆற்றுப்பாலத்தில் அனைத்து மின்கம்பங்களிலும் புதிதாக மின்விளக்குகள்

 

கொள்ளிடம், ஏப்.20: கொள்ளிடம் ஆற்றுப் பாலத்தில் உள்ள அனைத்து மின் கம்பங்களிலும் மின்விளக்கு பொருத்தப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனை சாவடி அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே பாலம் அமைந்துள்ளது. கடந்த 1957 ம் ஆண்டு முதல் இந்த பாலம் திறக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இன்றும் வலிமையாக இருந்து வரும் இந்த பாலத்தில் உள்ள 14 இரும்பு மின் கம்பங்களில் ஊராட்சி சார்பில் மின்விளக்கு பொருத்தப்பட்டு சில தினங்களில் அவைகள் பழுதாகி மீண்டும்,மீண்டும் பொருத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பொருத்தப்பட்ட மின்விளக்குகள் ஒளிராமல் இருந்தன.

Related Stories: