புதுக்கோட்டையில் வெள்ளரி விற்பனை அமோகம்

 

புதுக்கோட்டை, ஏப்.21: புதுக்கோட்டை பகுதியில் வெள்ளரி பிஞ்சு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து பல்வேறு மாவட்டங்களில் 100டிகிரிக்கு மேல் சுட்டெரிக்கும் வெயில் காணப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், பழஜூஸ், தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி விரும்பி குடித்து சாப்பிட்டு வருகின்றனர்.

Related Stories: