வேலாயுதம் பாளையம், ஏப். 21: மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்றனர். தோட்டக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த பாண்டிதுரை (50) என்பவர் மதுபாட்டில்களை விற்பனை செய்தது தெரியவந்தது. போலீசார் பாண்டித்துரையை கைது செய்து அவரிடமிருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.
