அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் ஒரு மிகப்பெரிய விஞ்ஞானி என்றும் அவர் பேசுவது வீட்டிற்கு சென்று யோசித்தால் தான் புரியும் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல் அடித்துள்ளார். திண்டுக்கல்லில் பரப்புரை மேற்கொண்ட அவர் திண்டுக்கல் சீனிவாசனுக்கும் செல்லூர் ராஜுவுக்கும் இடையே மிகப்பெரிய விஞ்ஞானி யார்? என போட்டி நடப்பதாகவும் தெரிவித்தார்.
பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது
திண்டுக்கல் சீனிவாசன் பேசுவது உடனே புரியாது தாமதமாகத் தான் புரியும், திண்டுக்கல் சீனிவாசன் சட்டமன்ற உறுப்பினராக பலமுறை இருந்திருக்கிறார், ஆனால் தொகுதி வளர்ச்சிக்கு ஏதாவது செய்து இருக்கிறாரா என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார்.
அவர் யோசித்து யோசித்து தத்துவங்களாக கூறுவார். திண்டுக்கல் சீனிவாசனுக்கும் செல்லூர் ராஜுவுக்கும் இடையே தான் யார் மிகப்பெரிய விஞ்ஞானி என்பதில் போட்டி. திமுக வேட்பாளர் செந்தில்குமாருக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தர வேண்டும் என்று பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
