பாஜக துணைதலைவர் குஷ்புவின் ஹெலிகாப்டரில் திடீர் சோதனை

நீலகிரி: உதகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள வந்த பாஜக துணைத்தலைவர் குஷ்பு பயணித்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன இந்நிலையில் பாஜக துணைத்தலைவரான குஷ்புவும் தமிழகத்தில் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார், இதன் ஒருபகுதியாக உதகை சட்டமன்ற தொகுதி வேட்பாளர் போஜராஜனை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக குஷ்பு ஹெலிகாப்டரில் உதகைக்கு வருகை தந்துள்ளார்.

பிரச்சாரங்களுக்கு பயணிக்கும் கட்சி தலைவர்கள், வேட்பாளர்களின் வாகனங்களையும், அவர்கள் செல்லும் ஹெலிகாப்டர்களையும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்து வருகின்றனர்.பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தமிழகம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தீட்டுக்கலில் ஹெலிகாப்டர் தலத்தில் இறங்கிய குஷ்புவின் ஹெலிகாப்டரில் இருந்த பைகள் மற்றும் ஆவணங்கள் சோதனை செய்யப்பட்டன. தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டனர், ஏதாவது பரிசு பொருட்கள் அல்லது பணம் உள்ளதா என தீவிர சோதனை செய்தனர் ஆனால் அவர்கள் சோதனையில் எதுவும் சிக்காத நிலையில் திரும்பி சென்றனர்.

மேலும் இந்த சோதனை காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால், இந்த வழக்கமான சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: