விழுப்புரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்புள்ள ஒரு டன் செம்மரகட்டைகள் பறிமுதல்

 

விழுப்புரம்: விழுப்புரம் அருகே லாரியில் கடத்தி வரப்பட்ட ஒரு கோடி மதிப்புள்ள ஒரு டன் செம்மரம் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செம்மரக்கட்டைகள் மற்றும் சந்தனக்கட்டைகள் கடத்தல் தொடர்பாக அவ்வப்போது பறிமுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. செங்கல்பட்டில் இருந்து தேனிக்கு விழுப்புரம் வழியாக லாரியில் செம்மரக்கட்டைகள் கடத்தப்படுவதாக வனத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதன் அடிப்படியில் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் வனத்துறை தீவிர வாகன சோதனை நடத்தினர். சந்தேகத்தின் அடிப்படையில் லாரி ஒன்று வந்தது. லாரியில் மேற்கொண்ட சோதனையில் எலக்ட்ரிக் சாமான்களுக்கு நடுவே செம்மரகட்டைகள் புதைத்து வைக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்தனர். ஒரு டன் செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்து கடத்தல்கார்கள், லாரி ஓட்டுனர்கள் உள்பட 4 பேரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: