திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த இளைஞர்களிடம் துப்பாக்கி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொடைக்கானல் வெள்ளி நீர்வீழ்ச்சி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். தென்காசி மாவலூர் பகுதியில் இருந்து வந்த ஜீப்பை சோதனை செய்தபோது துப்பாக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
