சென்னை: 180 உறுப்பினருக்கும் மேல் எதிர்த்து வாக்களித்தால் மசோதா நிறைவேறாது என ப.சிதம்பரம் பேட்டி அளித்துள்ளார். தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து ப.சிதம்பரம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது; எந்த மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளை இறுதி செய்வார்கள் என தெரியவில்லை. தமிழ்நாட்டு மக்களவை தொகுதிகள் 50% உயர்த்தப்பட்டால் 59ஆக ஆகும் என கூறுகிறார்கள். ஆனால், தொகுதி மறுவரையறைக்கு பின், தமிழ்நாட்டின் மக்களவை தொகுதிகள் 47ஆக குறையும்.
தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை எதிர்க்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 185. பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பாதி உண்மையை மட்டுமே சொல்கின்றனர். அதிமுக கருத்தை கேட்டால் அமித் ஷா கருத்தை கூறுகிறார் எடப்பாடி. தொகுதி மறுவரையறையை எடப்பாடி ஆதரிப்பது அறியாமையா? அச்சமா? என்று தெரியவில்லை. உத்தரபிரதேசத்தில் 50% உயர்த்தப்பட்டால் 120ஆக உயரும்; தொகுதி மறுசீரமைப்பு செய்தால் 140ஆக உயரும். என்று கூறியுள்ளார்.
