ரூ.5,000 லஞ்சம் வாங்கிய எஸ்எஸ்ஐ அதிரடி கைது

 

ஆலங்காயம்: திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதன். இவர் கடந்த 19ம் தேதி காரில் காவலூர் பகுதிக்கு சென்றபோது, லட்சுமணன் என்பவரது கார் மீது மோதியது. இதில் லட்சுமணன் மனைவி லட்சுமி (61) படுகாயமடைந்தார். இதுகுறித்து காவலூர் போலீசார் வழக்குப்பதிந்து, மஞ்சுநாதனின் காரை பறிமுதல் செய்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். காரை தருமாறு மஞ்சுநாதன் காவல் நிலையத்தை அணுகியுள்ளார்.

அப்போது, எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணன், ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுபற்றி மஞ்சுநாதன் திருப்பத்தூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். அவர்கள் ஆலோசனைபடி, ரசாயனம் தடவிய 5 ஆயிரம் ரூபாயை மஞ்சுநாதன் நேற்று ஆலங்காயம் காவல் நிலையத்தில் எஸ்எஸ்ஐ ராமகிருஷ்ணனிடம் கொடுத்தபோது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ராமகிருஷ்ணனை கைது செய்தனர்.

Related Stories: