டெல்லி: தமிழ்நாட்டில் பொது இடங்களில் மாடுகளை வெட்டக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. பக்ரீத் அல்லது வேறு எந்த பண்டிகைக்கும் மாடுகள், கன்றுகளை வெட்டக்கூடாது என ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. தமிழ்நாடு அரசின் மனுவை விசாரித்த நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா அமர்வு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்துள்ளது.
