ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் திடீர் நிலஅதிர்வு

திருமலை: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அதிகாலை சுமார் 5 மணியளவில் பல இடங்களில் நில அதிர்வு ஏற்பட்டது. சாகர் நகர், தாட்டிசெட்லபாலம், சீதாம்மதாரா, மாதவதாரா, பெடவல்தாரா, ஈஸ்ட் பாயிண்ட் காலனி, எச்.பி. காலனி மற்றும் பல இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. திடீரென ஏற்பட்ட நில அதிர்வால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

இதனால் அவர்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து தெருக்களில் தஞ்சமடைந்தனர். சில மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தங்கள் வீடுகளுக்குள் சென்றனர். ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ள இந்த நில அதிர்வால் எந்த பாதிப்பும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: