தனியார் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு தவெக அரசு அனுமதி

 

சேலம், ஜூலை 9: சேலம் மாநகராட்சியில் தனியார் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் இந்த திட்டத்தை ரூ.1,035 கோடியில் தனியார் மூலமே செயல்படுத்த தவெக அரசு உத்தரவிட்டுள்ளது. இது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சேலம் மாநகராட்சியில் கடந்த மாதம் நடந்த மாமன்ற கூட்டத்தில் தனியார் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தும், இந்த திட்டத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து மேயர், இந்த திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்தார். பின்னர், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் இருந்து சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தனியார் மூலம் 24 மணி நேரமும் தடையற்ற குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Related Stories: