சேலம், ஜூலை 1: சேலம் மாவட்டம் பூலாம்பட்டி அருகேயுள்ள பக்கநாடு செங்குட்டப்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி ஏழுமலை மனைவி வளர்மதி (53). இவர் விவசாய நிலத்தில் ஆடுகளை வளர்த்து வருகிறார். 2 செம்மறி ஆடுகளை நேற்று முன்தினம் இரவு பட்டியில் அடைத்து வைத்திருந்தார். நேற்று அதிகாலை வளர்மதி, பட்டிக்கு சென்று பார்த்தார். அப்போது, அங்கு மர்மவிலங்குகள் கடித்து குதறிய நிலையில் 2 ஆடுகள் இறந்து கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வளர்மதி, இது குறித்து போலீசாருக்கும், கால்நடை துறைக்கும், வருவாய் துறைக்கும் தகவல் அளித்தார். அதன்பேரில் பூலாம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் கால்நடை துறையினரும் அங்கு வந்து ஆய்வு செய்தனர். மர்மவிலங்கு கடித்து ஆடுகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
