உலகக்கோப்பை கிரிகெட் தொடருக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது; முன்பதிவு செய்தவர்களுகான டிக்கெட் விற்பணை வரும் 25-ம் தேதி தொடங்கும்: ICC அறிவிப்பு

மும்பை: இந்தியா, பாகிஸ்தான், இங்கிலந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கும் 13-வது ஒரு நாள் உலகக்கோப்பை கிரிகெட் தொடர் அக்டோபர் 5-ம் தேதி தொடங்கி நவம்பர் 19-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. அகமதாபாத்தில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளது.

ஆகஸ்ட் 25-ம் தேதியில் இருந்து உலக கோப்பை தொடருக்கான டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கும் நிலையில், டிக்கெட் பெறுவதற்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் உலக கோப்பை இணையதளத்தில் தங்கள் பெயர் உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்துகொண்டால் டிக்கெட் விற்பனை தொடர்பான தகவல்கள் முன்கூட்டியே அவர்களுக்கு தெரிவிக்கபடும். டிக்கெட் விற்பனையின் போது முன்பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கபடும் என ICC தெரிவித்துள்ளது.

இந்திய அணி மோதும் போட்டிகளுக்கான டிக்கெட்டுகள் வரும் 30-ம் தேதி முதல் விற்பனை செய்யவுள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகான டிக்கெட்டுகள் செப்ட்டம்பர் 15-ம் தேதி விற்கபடும் என தெரிவிக்கபட்டுள்ளது

The post உலகக்கோப்பை கிரிகெட் தொடருக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியது; முன்பதிவு செய்தவர்களுகான டிக்கெட் விற்பணை வரும் 25-ம் தேதி தொடங்கும்: ICC அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: