சின்னசேலம்: கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுகா வீ.லட்சுமிநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (33). டிரைவர். இவரது மனைவி சுவேதா (20). தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சக்திவேல் தனது மைத்துனர் செங்கமலை (எ) சுகிர் என்பவரிடம் செல்போன் மூலம் நேற்று காலை வாட்ஸ்அப் செய்தி ஒரு மெசெஜ் அனுப்பி உள்ளார். அதில், ‘உன் அக்கா இறந்து விட்டாள். என்னுடைய பொக்லைனுக்கு பின்னால் உடல் புதைக்கப்பட்டுள்ளது. நானும் தற்கொலை செய்து கொள்ளபோகிறேன்’ என்று கூறியிருந்தார்.
உடனே செங்கமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுவேதாவின் சடலத்தை தோண்டி எடுத்தனர். அருகில் ஒரு மரத்தில் தூக்கில் தொங்கிய சக்திவேலின் சடலத்தையும் கைப்பற்றினர். இதுகுறித்து கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மனைவியை கொன்று புதைத்து கணவன் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.