இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஶ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, “ஆக்கிரமிப்புகள் இருப்பதை ஒப்புக்கொண்ட அதிகாரிகள் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்காததில் இருந்து, ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகளும் இணைந்து செயல்படுவதாக சந்தேகம் எழுகிறது. இவ்வழக்கில் நீர்வளத் துறை செயலாளரையும், தாம்பரம் மாநகராட்சி ஆணையரையும், மின்சார வாரிய தலைவரையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்க்கிறோம். நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு வழங்கியது எப்படி, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி என அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிடுகிறோம், ” இவ்வாறு தெரிவித்து விசாரணையை ஜூலை 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
The post நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு வழங்கியது எப்படி?: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.
