வைரலோ வைரல்

தோனிக்கு விசில் போடு!

கடந்த சில வாரங்களாகவே பல வகையிலும் மாஸ் டிரெண்டிங்கில் உள்ளது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள். அதிலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான எம்.எஸ்.தோனி ஏற்கனவே தனது ஓய்வு குறித்து அறிவித்துவிட்டிருந்த நிலையில் அவர் விளையாடும் கடைசி ஐபிஎல் இது என்பதால் ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ விளையாட்டைக் காண எங்கெங்கோ இருந்தெல்லாம் கூட மக்கள் கூட்டம் அலைகடலெனத் திரள்கிறார்கள். இதில் சினிமா, அரசியல் பிரமுகர்கள் உட்பட அத்தனை பேரும் ஒரு முறையேனும் ‘தல’ தோனி விளையாடுவதை நேரில் பார்த்துவிட எண்ணி ஒரு டிக்கெட் கிடைத்துவிடாதா என காத்துக்கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் தமிழக முதல்வர் திரு. ஸ்டாலின் மற்றும் அவர் குடும்பத்தார், ஷாலினி அஜித் மற்றும் அவர் குடும்பத்தார், மேலும் நடிகர்கள் தனுஷ், த்ரிஷா, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், என இந்த ஐபிஎல் பலருக்கும் உணர்வுப்பூர்வமாகவே தவிர்க்க
முடியாத போட்டிகளாக மாறியிருக்கிறது.

காக்கிச் சட்டையில் தேன் சிட்டு…!

தங்களைத் தாங்களே வெளிப்படுத்திக் கொள்ளவும், தங்கள் இருப்பைக் காட்டிக்கொள்ளவும் வேண்டிய கட்டாயத்தில்தான் உலகின் ஒவ்வொரு கடைக்கோடி மனிதனும் இயங்கிக் கொண்டிருக்கிறான். இதில் காவல்துறை எம்மாத்திரம். ஒவ்வொரு மாநில காவல் துறையினரும் அவர்களுக்கென தனி சமூக வலைத்தள பக்கங்கள் துவங்கி அதில் தினம் நிகழும் கூட்டங்கள், செயல்பாடுகள், புதிய சட்டங்கள், பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த அறிவிப்புகள் என பதிவு செய்கிறார்கள். சில நேரங்களில் காவல் துறைப் பணியாளர்கள் பணிகளுக்கு இடையே செய்யும் சில மகிழ்வான தருணங்களையும் பதிவதுண்டு. அப்படி ஒரு அருமையான வீடியோவை கேரள காவல்துறை பகிர்ந்துள்ளது. சமூக ஊடகங்களில் வைரலாகிவரும் இந்த வீடியோவில், போலீஸ்காரர் பறவைக்கு பூவில் இருக்கும் தேனைக் கொடுக்கிறார். தேன்சிட்டுக் குருவி ஆர்வமாக பூக்களை கொத்துகிறது. இந்த வீடியோவில் உள்ள தேன்சிட்டுக் குருவி தென்னிந்தியாவின் மிகச்சிறிய பறவைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

The post வைரலோ வைரல் appeared first on Dinakaran.

Related Stories: