வந்தே மெட்ரோ ரயிலுக்கு நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம்

அகமதாபாத் செல்லும் வந்தே மெட்ரோ ரயில் சேவை தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக அதன் பெயரானது நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. குஜராத் மாநிலம் பூஜ் மற்றும் அகமதபாத் இடையே வந்தே மெட்ரோ ரயில் சேவை நேற்று தொடங்கப்பட்டது. அகமதாபாத் வந்திருந்த பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பூஜ் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் சேவையை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

ரயில் சேவை தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக பூஜ்-அகமதபாத் வந்தே மெட்ரோ ரயிலின் பெயரை ரயில்வே துறை அமைச்சகமானது நமோ பாரத் ரேபிட் ரயில் என பெயர் மாற்றம் செய்தது. இந்த விரைவு ரயிலானது நகரங்களுக்கு இடையேயான தொடர்பை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டது. பூஜ் முதல் அகமதாபாத் வரையிலான 359கி.மீ. தூரத்தை 5.45 மணி நேரத்தில் கடக்கும். இடையில் 9 ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லும். இன்று முதல் பொதுமக்களுக்கான தொடர் ரயில் சேவை தொடங்கும்.

The post வந்தே மெட்ரோ ரயிலுக்கு நமோ பாரத் விரைவு ரயில் என பெயர் மாற்றம் appeared first on Dinakaran.

Related Stories: