புதுச்சேரி: புதுவை முத்தியால்பேட்டையில் அறக்கட்டளையில் இணைப்பதாக கூறி மக்களிடம் செல்போன் எண் வாங்கி பாஜகவில் இணைத்துள்ளனர். செல்போன் எண் தந்தவர்களுக்கு பாஜகவில் இணைந்ததாக குறுஞ்செய்தி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பாஜகவில் இணைந்ததாக எஸ்எம்எஸ் வந்தாலும், எங்களுக்கு விருப்பமான கட்சிக்குத்தான் வாக்களிப்போம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.