சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு


மதுரா: உத்தரபிரதேசத்தில் நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. உத்தர பிரதேசத்தில் பிருந்தாவன் பகுதி அருகே நிலக்கரிகளை ஏற்றி கொண்டு சூரத்கார் மின்சார ஆலைக்கு சரக்கு ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த சரக்கு ரயில் திடீரென விபத்தில் சிக்கியது. ரயிலின் 25 பெட்டிகள் தடம் புரண்டன. இதனை ஆக்ரா பிரிவுக்கான மண்டல ரயில்வே மேலாளர் தேஜ் பிரகாஷ் அகர்வால் உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், இந்த வழியில் செல்ல கூடிய 3 ரயில்வே வழிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

இதற்கிடையில் தகவலறிந்து சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் மற்றும் ரயில் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. விபத்துக்கான காரணம் உடனடியாக தெரிய வரவில்லை. ரயில் தடத்தில் மீண்டும் ரயில் போக்குவரத்து மேற்கொள்வதற்கான சீரமைப்பு பணிகளில் ரயில் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: