டெல்லி: பீகாரில் தாழ்த்தப்பட்டோரை பாதுகாக்க ஐக்கிய ஜனதா தளம் பாஜக கூட்டணி அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார். பீகாரில் நவாடா மாவட்டம், மஞ்சி தோலாவில் உள்ள மகாதலித் குடியிருப்பில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது. தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை பற்றி கவலைப்படாத ஐக்கிய ஜனதா தளம் பாஜக அரசு, அவர்கள் மீதான தாக்குதலை தடுக்கவில்லை. பீகாரில் ஐக்கிய ஜனதா-பாஜக தலைமையில் கூட்டாட்சி நடப்பதாக கார்கே கண்டித்துள்ளார்.
The post பீகாரில் தலித் வீடுகள் எரிப்பு: மல்லிகார்ஜூன கார்கே கண்டனம் appeared first on Dinakaran.