ரூ.30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது இந்திய ரயில்வே

டெல்லி : ரூ,30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது இந்திய ரயில்வே. வந்தே பாரத் ரயிலை தயாரித்து வழங்க ஒப்புக்கொண்டிருந்த அல்ஸ்தம் இந்தியா நிறுவனம் ரயில் விலையை அதிகமாக குறிப்பிட்டதால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது. ஒரு வந்தே பாரத் ரயிலுக்கு அதிகபட்ச விலையாக இந்திய ரயில்வே ரூ.140 கோடி நிர்ணயித்திருந்தது. அல்ஸ்தம் இந்தியா நிறுவனம் சமர்ப்பித்த டெண்டரில் ஒரு ரயில் விலை ரூ.150.9 கோடியாக குறிப்பிட்டிருந்தது.

The post ரூ.30,000 கோடிக்கு 100 வந்தே பாரத் ரயில் வாங்குவதற்கு விடப்பட்ட டெண்டரை ரத்து செய்தது இந்திய ரயில்வே appeared first on Dinakaran.

Related Stories: