உ.பியில் நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!!

சென்னை: உத்திரப்பிரதேசத்தில் வரும் 22ம் தேதி நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழா வரும் ஜனவரி 22ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது.

அதன்படி, சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, அயோத்தி – ஶ்ரீராம ஜென்மபூமி தீர்த்த க்‌ஷேத்ரா சார்பில் கும்பாபிஷேக நிகழ்வுக்கு கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டது. அழைப்பிதழை பெற்றுக்கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உறுதியாக குடும்பத்துடன் வருவதாகவும், இந்த விழாவில் பங்கேற்பதை பாக்கியமாக கருதுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்ட அழைப்பிதழ் அட்டைகள், சிவப்பு மற்றும் தங்க நிறத்தில் அமைந்துள்ளன. இந்த அழைப்பிதழில் அயோத்தி ராமர் கோயிலின் படம், ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பெயர் மற்றும் சின்னம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொள்கிறார். மனைவி லதா, சகோதரர் சத்யநாராயணாவுடன் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார். வரும் 21ம் தேதி அயோத்தி செல்லும் ரஜினி, 22ம் தேதி கும்பாபிஷேகத்தில் பங்கேற்கிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முடித்து கொண்டு வரும் 23ம் தேதி சென்னை திரும்புகிறார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சன்னியாசிகள், மடாதிபதிகள், முக்கிய பிரமுகர்கள் என 8,000 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அழைப்பு விடுக்கப்பட்டுள்ள 8,000 பேரில், 3,500 பேர் சன்னியாசிகள், மற்றவர்கள் சிறப்பு அழைப்பாளர்கள். 8,000 பேருக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் உத்திரப்பிரதேச அரசு செய்து தருகிறது.

The post உ.பியில் நடைபெறும் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்கிறார் நடிகர் ரஜினிகாந்த்..!! appeared first on Dinakaran.

Related Stories: