உதயகுமார் மீது 3 பிரிவில் வழக்கு

மதுரை: மதுரை மாவட்டம், திருமங்கலம் பிரதான கால்வாய், மேலூர், உசிலம்பட்டி 58 கிராம கால்வாய்களில் ஒரு போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்ககோரி நேற்று முன்தினம்கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த அதிமுக எம்எல்ஏ உதயகுமார் மற்றும் கட்சியினர் திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து உதயகுமார் உட்பட 57 பேரை போலீசார் கைது செய்து மாலையில் விடுவித்தனர். இந்நிலையில் உதயகுமார் உட்பட அதிமுகவினர் மீது பிரிவு 143 சட்டவிரோதமாக கூடுதல், பிரிவு 341 பொதுமக்களை வழிமறித்தல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

The post உதயகுமார் மீது 3 பிரிவில் வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: