சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு

சென்னை: சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவை இன்று காலை கூடிய போது, கள்ளக்குறிச்சி விவகாரத்தை எழுப்பி பேச அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். கேள்வி நேரத்திற்கு பின்பு பேச அனுமதி தருகிறேன் என சபாநாயகர் விதிகளை சுட்டிக்காட்டிய பின்பும் தொடர்ந்து அதிமுகவினர் இருக்கையில் அமராமல் அமளியில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சபாநாயகர், “8 நிமிடங்கள் அவையை நடக்கவிடாமல் செய்து இருக்கிறீர்கள். இருக்கையில் அமரவில்லை என்றால் நடவடிக்கை எடுப்பேன்” என தெரிவித்தார்.

எனினும் சபாநாயகர் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து அதிமுவினர் அமளி செய்ததை தொடர்ந்து, அதிமுக உறுப்பினர்களை வெளியேற்ற அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட அதிமுக உறுப்பினர்கள் அவை வாயிலில் இருந்து முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து பேசிய அவை முனைவர் துரைமுருகன் “பிரச்சினையை சபையில் பேச எல்லோருக்கும் உரிமை உண்டு. நாங்களும் பேசி இருக்கிறோம். கருப்புச் சட்டை அணிந்து வந்து ஊடகத்திடம் பேசிவிட்டு வீட்டுக்குப் போய்விடுகிறார்கள். விளம்பரத்துக்காகவே அதிமுகவினர் தொடர்ந்து விதிகளுக்கு முரணாக செயல்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் துரைமுருகன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.3 கோடியில் ரூ. 2 கோடியை மட்டுமே எம்.எல்.ஏ.க்கள் செலவிட அனுமதி இருந்தது. மீதமுள்ள ரூ.1 கோடியை அரசு பரிந்துரைக்கும் திட்டத்திற்கு எம்.எல்.ஏ -க்கள் செலவிட வேண்டியிருந்தது. இனி ரூ.3 கோடி தொகுதி வளர்ச்சி நிதியையும் எம்.எல்.ஏ- க்கள் நேரடியாக திட்டங்களுக்கு செலவிடலாம். முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உடல்நலத்திற்கு பணம் தேவை படுகிறது என்று தெரிவித்திருக்கிறேன் முதல்வர் அது குறித்து பேசிவிட்டு தெரிவித்திருப்பதாக தெரிவித்தார். சட்டமன்ற உறுப்பினர்கள் திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஜி.எஸ்.டியையும் நீக்க முதலமைச்சர் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் துரைமுருகன் தெரிவித்தார்.

The post சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: